மோட்டார் சைக்கிளில் பயணித்த கர்ப்பிணிப் பெண் கீழே தவறி விழுந்து பலி

0
273

கணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கர்ப்பிணிப் பெண் கீழே தவறி விழுந்து மரணித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்.பொன்னாலை பகுதியில் பாலத்துக்கருகில் நேற்றுக் காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கர்ப்பிணிப் பெண்ணான இவரை கணவன் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை சேர்ந்த ஜெயந்தன் தேவப்பிரியா என்ற 23 வயது பெண்ணே மரணித்துள்ளார்.

கர்ப்பிணிப்பெண்ணான இவரை மருத்துவ பரிசோதனைக்காக கணவன், காரைநகரிலிருந்து மூளாய் வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். யாழ்.பொன்னாலை பாலத்தின் அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது பின்னால் அமர்ந்திருந்த பெண் தவறி விழுந்துள்ளார்.

உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி பெண்ணை தூக்க முற்பட்டபோதும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here