யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் எப் குழுவில் இரண்டு போட்டிகள்

0
88

யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் எப் குழுவில் இரண்டு போட்டிகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளன.

இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் துருக்கி மற்றும் ஜோர்ஜியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டியில் துருக்கி அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என 56 வீத கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடையும் என 25 வீதமும் ஜோர்ஜியா வெற்றி பெறும் என 19 வீதமும் கருத்துக் கணிப்பில் பதிவாகியுள்ளன.

இன்று நள்ளிரவில் நடைபெறும் மற்றைய போட்டியில் போர்த்துக்கல் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் மோதுகின்றன. இப்போட்டியில் போர்த்துக்கல் அணி வெற்றிபெறும் என 64 வீதமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இன்றைய போட்டியில் போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியோனோ ரொனால்டே விளையாடவுள்ளார்.

ஆடவருக்கான சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரராக உள்ள ரொனால்டோ இதுவரையில் 128 கோல்களை அடித்துள்ளார். இன்றைய போட்டியில் ரொனால்டோ விளையாடுவது தமது அணிக்கு பலமாக அமையும் என போர்த்துக்கல் அணியின் பயிற்சியாளர் ரொபோர்டோ மார்டினஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரொனால்டோ இதற்கு முன்னர் ஐந்து யூரோ கிண்ண அத்தியாயங்களில் விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையை தன்வசம் கொண்டுள்ளார். இது அவர் விளையாடும் ஆறாவது அத்தியாயம் என்பதுடன் அவரது அனுபவம் தமது அணிக்கு இன்றியமையாதது எனவும் பயிற்றுனர் தெரிவித்துள்ளார்.

சுரேஸ் குமார் பேனா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here