ரஞ்சனுக்கு நிபந்தனையுடன் கூடிய விடுதலை

0
279

பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கையொப்பமிட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காவிற்கான பொதுமன்னிப்பிற்கான ஆவணத்திலேயே கையொப்பமிட்டுள்ளார்.

இனி வரும் காலங்களில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையையோ அல்லது நடவடிக்கையையோ மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியின் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

21 ஆகஸ்ட் 2017 அன்று அலரி மாளிகைக்கு முன்பாக அவர் வழங்கிய அறிக்கைக்காக முதல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், 2021 ஜனவரி 12ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here