ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க பதில் அரச தலைவராக பதவியேற்ற பின்னர் அடுத்த வாரம் இந்த நியமனம் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ருவான் விஜேவர்த்தன, விஜேய நாளேடுகளின் தலைவர் ரஞ்சித் விஜயவர்தன அவர்களின் இளைய மகனும் லங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மருமகனும் ரணிலின் நெருங்கிய உறவினரும் ஆவார்.