ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதா? இல்லையா? என உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.

வினிவித முன்னணியின் பொதுசெயலாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதா? இல்லையா? என்பதை உயர் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் இன்று அறிவிக்கவுள்ளது.