கங்கேகசன்துறையில் இருந்து, கோட்டை நோக்கி இன்று காலை  சென்றுகொண்டிருந்த உத்தரதேவி ரயில்  தம்புத்தேகம , செனரத்கம ரயில் நிலையத்துக்கு இடையே தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டுள்ளது.
இதனால் 150 மீற்றருக்கு கொங்கிறீட் சிலிப்பர் கட்டைகள் சேதமடைந்துள்ளன.
ரயிலின் முன்பக்க இயந்திரப் பெட்டியும் மற்றுமொரு பெட்டியும் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக வடக்குப் பாதையில் புகையிரத சேவை தற்காளிகமாக தடைப்பட்டுள்ளது.