ரயில் தரிப்பு மேடைக்கு இழுத்துவரப்பட்ட கார் – வீடியோ இணைப்பு

0
310

ரயிலால் மோதப்பட்ட கார், ரயில் தரிப்பு மேடை வரை இழுத்து வரப்பட்டது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் மேல் யாகொட பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த நகரங்களுக்கு இடையேயான கடுகதி ரயில் கம்பஹா மாவட்டத்தின் யாகொட நிலையத்துக்கு அருகில் கார் ஒன்றுடன் மோதிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

ரயில்வே கடவை கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் ரயில் பாதையில் உள்நுழைந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கணேமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here