லங்கா பிரீமியர் லீக் தொடர் வரும் 2022 டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை ஓகஸ்ட் மாதத்தில் நடத்த அட்டவணைப்படுத்தப்பட்டபோதும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

‘எல்.பி.எல் தொடர் வரும் டிசம்பர் 6 தொடக்கம் 23 ஆம் திகதி வரை நடைபெறும்   என்று இந்தத் தொடரின் ஏற்பாட்டாளர் சமன்த தொடன்வெல  தெரிவித்தார்.

எல்.பி.எல் தொடரில் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. 2020 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்தத் தொடரின் முதல் இரண்டிலும் ஜப்னா கிங்ஸ் சம்பியன் பட்டத்தை வென்றது. அதேபோன்று கோல் கிளாடியேட்டர்ஸ் இரண்டு தொடரிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.