சமையல் எரிவாயு விலையை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 1,000 ரூபாவால் அதிகரிக்கப்படலாமென்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனமானது தற்போது வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரொன்றை 2500 ரூபா நட்டத்திலேயே மக்களுக்கு பெற்றுக்கொடுத்து வருகிறது. தாய்லாந்து சியாம் நிறுவனத்திடமிருந்தே சமையல் எரிவாயு கொள்வனவு செய்யப்பட்டு வந்தது.

தற்போது அந்த நிறுவனத்திடமிருந்து சமையல் எரிவாயு கொள்வனவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கொள்வனவு செய்த ஓமான் நிறுவனத்திடமிருந்து சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஓமான் நிறுவனத்துக்கு சியாம் நிறுவனத்தைவிட 34 அமெரிக்கன் டொலரை அதிகமாக செலுத்தவேண்டியுள்ளது. இந்த நிலையிலேயே 1,000 ரூபாவால் சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை அதிகரிக்க நேரும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.