நாகசேனை நகரிலிருந்து லிந்துலை – சரஸ்வதி தமிழ் மகாவித்தியாலயத்திற்குச் செல்லும் வீதியில் சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அருகில் வீதியிலிருந்து எட்டிப்பார்க்கும் தூரத்திலிருந்து பச்சிளம் குழந்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் சென்ற நபரொருவர் குழந்தை ஒன்று கிடப்பதாக கண்டு அவ்விடத்தில் அறிவித்த நிலையில், அப்பகுதியில் உள்ளவர்களால் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பச்சிளம் குழந்தையை மீட்டுள்ளதுடன் இறந்த நிலையில் இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
நீதவான் விசாரணையின் பின்னர் விரிவான தகவல்கள் அறியதர முடியும்.

படமும் தகவலும்- செல்வா