வத்தளை, எலகந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணி (Up Date) காணொளி இணைப்பு

0
503

வத்தளை, எலகந்த, ஹெந்தல பிரதேசத்தில் இன்று சன நடமாட்டம் நிறைந்த இடத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்  மட்டக்குளிய அலி-வத்தே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

முகக்கவசம் அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த இளைஞன் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த நபர் ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

சம்பவம் நடந்த இடத்தில் ரி-56 ரக் குண்டுகளை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.
இரு போதைப்பொருள் குழுக்களுக்கிடையே இடையிலான தனிப்பட்ட குரோதமே முப்பாக்கிச் சூட்டுக்கு காரணமென ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here