இலங்கையில் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல்கள் திணைக்களம் புதிய அசிவிப்பொன்றை விடுத்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்குமாறு வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

தமது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை பிரதேச கிராம உத்தியோகத்தர்களிடம் சென்று அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் elections.gov.lk  என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெயர் சேர்க்கப்படாவிட்டால், ஜூலை 12ஆம் திகதிக்கு முன்னதாக 0112 860034 என்ற எண்ணுக்குத் அறியத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.