நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றினை கண்டு கொள்ளாமல்
வார இறுதியில் சனி , ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய தொடர் விடுமுறை நாட்களிலும் வெளிமாவட்டங்களிலிருந்தும் , வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதனால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து விடும் என்ற அச்சம் நுவரெலியா வாழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுகாதார வழிக்காட்டு முறைகளை அலட்சியப்படுத்தி நடமாடுவதை காண முடிகிறது
சுற்றுலா பிரயாணிகளின் வருகை காரணமாக லவர் சீலிப் நீர் வீழ்ச்சி விக்டோரியா பூங்கா, கிறகறி வாவி சூழலியல் பூங்கா,உலக முடிவு , சீத்தாஎலிய கோவில் போன்ற பகுதிகளுக்குச் சென்றுவருகின்றனர்.
இதனால் நுவரெலியா – பதுளை நுவரெலியா – கண்டி ,நுவரெலியா ஹட்டன் போன்ற பிரதான வீதியெங்கும் வெளி மாவட்ட இலக்கத்தகடு பதிக்கப்பட்ட வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றமையால் பிரதான பாதைகளில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் அறைகள் நிரம்பி வழிவதாக சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்களும் தெரிவிக்கின்றன .
ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்ற போதிலும் நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்கள் கொள்வனவு செய்வதில் தயக்கம் காட்டி வருவதாகவும் வர்த்தக நடவடிக்கைகள் சூடு பிடிக்கவில்லை எனவும் தங்களது அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்து கொள்வதற்கு மாத்திரம் பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்
சுற்றுலா பயணிகளாக வருகை தந்தவர்களில் பெருபாலானவர்கள் சுகாதார விதி முறைகளை பின்பற்ற தவறுவதனால் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாகவும் எனவே சுற்றுலா பயணிகள் சுகாதார விதி முறைகளை பின்பற்றுமாறும் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர் மற்றும் சுகாதார வழி முறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்து , அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் நுவரெலியா மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
செ.திவாகரன்