ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்களால் வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்ட இலங்கை அணியை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய வாழ்த்தியுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் மூலமே இந்த வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய மூன்று மாதங்கள் கடந்தப்பின்னர் முதன் முறையாக இவ்வாறான பதிவொன்றையிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.