விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 17 இல் ஆரம்பம்

0
227

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை தற்போது நடைபெற்று முடிந்திருக்கின்ற நிலையில் அதன் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை முதற்கட்டமாக இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஜுன் 30 முதல் ஜுலை 9 வரை இடம்பெறும் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

85 பாடசாலைகளில் 106 மதிப்பீட்டு நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறும் என்றும் இப்பணியில் 32368 அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here