2022 உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்காத அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இன்று முதல் எதிர்வரும் – 08 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்களது அதிபர்கள் மூலமாகவும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள், இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான, www.doenets.lk  அல்லது onlineexams.gov.lk/eic    திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கையடக்க தொலைபேசி செயலி (Mobile App) ‘DOE’ ஊடாகவோ பிரவேசித்து ஒன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனை அறிவித்துள்ளார்.