விதிமுறைகளை மீறினால் தண்டனை – கைத்தொலைபேசிகளுக்கு அனுமதி இல்லை

0
258

இன்றைய வாக்கெடுப்பின் போது புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தொலைபேசிகள் கொண்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கேட்டுக்கொண்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் உரிய விதிமுறைகளை கடைப்பிடித்து தேவையான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இது ரகசிய வாக்கெடுப்பு என்பதால், உறுப்பினர்களின் வாக்குச்சீட்டை புகைப்படம் எடுக்க கட்டாயப்படுத்தும் எந்தவொரு செயலும், அவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு தடை விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1981 ஆம் ஆண்டின் 2 ஆம் எண் ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 20வது பிரிவு, தேர்தல்களின் போது வாக்களிக்கும் உறுப்பினர்களை செல்வாக்கு செலுத்துவது அல்லது வற்புறுத்துவதைத் தடுப்பது உட்பட, வாக்களிப்பது தொடர்பான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுத்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here