எம்பிலிபிட்டிய கொலன்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேயஸ் தோட்டத்தின் பீ பிரிவில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இனதெரியாதோர் தீ மூட்டி எரித்து நாசமாக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி ஹேயஸ் தோட்டத்தின் பீ பிரிவை சேர்ந்த சிவகுமார் என்பவரின் முச்சக்கர வண்டியே இவ்வாறு தீ வைத்து நாசமாக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி முச்சக்கர வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கும் சிறு சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கொலன்ன பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி தோட்டப் பகுதியில் நாளுக்கு நாள் கசிப்பு உட்பட மது விற்பனையும் அதிகரித்தது வருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிவா ஸ்ரீதரராவ்