வீட்டு சமையலறையில் நுழைந்த சிறுத்தைப்புலியினால் பதற்றம் – வீடியோ இணைப்பு

0
1423

வீட்டிலுள்ள சமையலறைப்பகுதியில் சிறுத்தைப்புலியொன்று நுழைந்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட சம்பவமொன்று தலவாக்கலையில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தலவாக்கலை லோகி தோட்ட குடியிருப்பில் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை புலியினால் அப்பகுதியில் பெரும் பதறற நிலை ஏற்பட்ட்டது.

கடும் மழை நேரத்தில் நேற்று இரவு . 10.30 மணியளவில் வீட்டின் சமையலறை கூரை வழியாக வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையின் சத்தத்தை கேட்ட குடியிருப்பாளர் பார்த்த போது சிறுத்தை தாக்க முற்பட்டுள்ளது.

எனினும் தன்னை சுதாகரித்துக்கொண்ட அவர் பிள்ளைகளையும் மனைவியையும் விரைந்து வீட்டிலிருந்து வெளியேற்றியதுடன் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களையும் அடைத்து அயலவர்களை அழைத்துள்ளார்.

அதனையடுத்து தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் இன்று மதியம் நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளை வரவழைத்து சிறுத்தை பிடித்து சென்றனர்.

சிறுத்தை வீட்டு வளர்ப்பு நாயை வேட்டையாட வந்த போதே வீட்டின் பின்புறம் உள்ள மண் திட்டிலிருந்து வீட்டு கூரை  வழியாக பாய்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எம்.கிருஸ்ணா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here