திம்புளை – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் இருந்த சிறுத்தைபுலியை நுவரெலியா வனஜீவராசிகள் அதிகாரிகள் மற்றும் இரந்தனிகல பசு வைத்திய வைத்தியர் அத்தரங்கொல பிரிதெனிய தலைமையிலான குழுவினர் சிறுத்தைப்புலிக்குட்டியை உயிருடன் மீட்டு ரந்தனிகெலவிற்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

வீட்டில் உள்ள நாய்களை வேட்டையாடுவதற்காக குறித்த பிரதேசத்திற்கு சிறுத்தைப்பு வந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதியில், இருக்கும் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் இதன்போது வன ஜீவராசி அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பகுதியில் உள்ள வீடொன்றில் விரகு வைக்கும் கூட்டில் சிறுத்தைப்புலி இருந்தமையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட சம்பவமொன்று இன்று (05.10.2022) காலை இடம்பெற்றுள்ளது.

சிறுத்தைப்புலியைக் கண்ட வீட்டாளர்களும் பிரதேச மக்களும் பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன் இது தொடர்பில் நுவரெலியா வனஜீவராசிகள் காரியாலயத்திற்கும் அறிவித்ததையடுத்து திம்புள்ள பத்தனை பொலிஸார் மற்றும் வனஜீவராசி அதிகாரிகள் இணைந்து குறித்த சிறுத்தை புலிக்குட்டியை உயிருடன் மீட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

  எம். கிருஸ்ணா