இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளான இன்று இலங்கை அணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற
இந்த போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 508 ஓட்டங்களை இலங்கை அணி இலக்காக நிர்ணயித்தது. அதில் பாகிஸ்தான் 261 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.