வெலிக்கடைப் படுகொலையின்  39ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) அலுவலகத்தில் நடைபெற்றது.

ரெலோவின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,

ரெலோ வின் உப தலைவர் இந்திரகுமார் பிரசனன்னா, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர்  , தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் இளைஞர் அணி உப தலைவரும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினருமான இரத்தினையா வேணுராஜ், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்,  உள்ளிட்ட பலரும் கநந்து கொண்டனர்.