வெலிமடை நகரில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு, அங்குள்ள பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருப்பதாக, வெலிமடைப் பொலிசார் தெரிவித்தனர்.

07-06-2022ல் இரவு வெலிமடை நகரில் புடவை வர்த்தக நிலையமொன்றும், மலிகைப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றும், மின்சார மற்றும் கட்டிட உபகரணங்கள் விற்பனை நிலையமொன்றுமே உடைக்கப்பட்டு, பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இது குறித்து, வெலிமடைப் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறிப்பிட்ட திருட்டுக்கள் குறித்து தகவல்கள் கிடைத்திருப்பமையினால்இ விரைவில் திருடர்களை கைது செய்ய முடியுமென்று வெலிமடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி H.W. ஹேரத் நம்பிக்கை தெரிவித்தார்.

பதுளை நிருபர்