வெள்ளவத்தை ரயில் விபத்தில் உடபுசல்லாவை யுவதி பலி

0
847

வெள்ளவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவத்தில் 20 வயதுடைய உடபுஸ்ஸல்லாவ யுவதியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த புகையிரதத்துடன் இளம் பெண்கள் இருவர்; மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இரு யுவதிகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடபுஸ்ஸல்லாவ பிரதேசத்தில் கிராசியன் பிரிவில் வசிக்கும் யுவதியே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கும் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here