பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 71 வயதான நோயாளி ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததனை அடுத்து அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மீது உயிரிழந்தவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான வைத்தியர் குறித்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், வைத்தியரை தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளை வைத்தியசாலையின் வைத்தியர்கள் வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.