இலங்கை  ஆசிரியர் சேவையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோஸப்  ஸ்டாலினின் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது என இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்

ஜோசப் ஸ்டாலின் இன்று C.I.D யினரால் கைது செய்யப்படமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது.

இது அரசியல் சூழ்ச்சிக்காக இடம்பெற்ற கைதாகவே நாங்கள் கருதுகிறோம்  ஜோசப் ஸ்டாலின்  ஆசிரியர்களுக்காக மட்டுமன்றி பொது மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவர் எனவே உடனடியாக அவர் விடுதலை செய்யவேண்டும் இல்லை எனின் திங்கள் முதல் மலையக ஆசிரியர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளார்