ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியில் தோட்டப்புற மாணவர்கள் உள்வாங்கும் எண்ணிக்கையில் வீழ்ச்சி

0
384

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் தோட்டப்புற மாணவர்கள் உள்வாங்கப்படும் சதவீதம் குறைந்துள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சிடம் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் விளக்கப்படுத்தியுள்ளதுடன், தோட்டப்புற மாணவர்களை அதிகமாக உள்வாங்கும் பொறிமுறையொன்றின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் முயற்சியால் 1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் தோட்டத் தொழிலாளர்களது பிள்ளைகளை மாத்திரமே சேர்க்க முடியுமென்ற நிலைமை காணப்பட்டது. ஆனால் தற்போது தோட்டங்களில் பணிப்புரிபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துவிட்டது.

இக்கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்கும் பொறிமுறையை காலத்துக்கு ஏற்றால்போல் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இக்கல்லூரிக்கான அனுமதியை பெற தாய் அல்லது தந்தையின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிகள் மாத்திரம் உள்வாங்கப்பட்டுள்ளது. அதை மாற்றியமைத்து தமது  மூதாதையினர் தோட்டங்களில் பணிப்புரிந்திருந்தால் அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கட்டாயம் அனுமதியை வழங்க வேண்டும்.

அதே போன்று தோட்டப் பாடசாலைகளில் மாணவர் ஒருவர் கல்வி கற்றிருப்பதற்கான அத்தாட்சியை உறுதிப்படுத்தினால் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கல்வி அமைச்சிடம் முன்வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here