மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரேமச்சந்திர நேற்றைய தினம் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில ஹிருணிகாவை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக் கூடாது என்றார். எல்லாவற்றிற்கும் முன் தாய்மை மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.