ஹிருணிக்கா உட்பட 11 பேர் பிணையில் விடுதலை

0
247

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 11 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ; தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ளுதுடீ இளைஞர் பிரிவின் உப தலைவர் ரெஹான் ஜயவிக்ரம உள்ளிட்ட குழுவினர் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here