அட்டன் – செனன் தோட்ட தீ விபத்து; உடனடியாக களமிறங்கிய ஜீவன்

0
178

அட்டன் செனன் தோடத்தில்
தீ விபத்துக்குள்ளான குடியிருப்புக்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் இரவிலே சென்று பார்வையிட்டு தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார் ஜீவன் தொண்டமான்.”

ஹட்டன் செனன் தோட்டம், கே.எம். பிரிவு தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு (03) தீப்பரபல் ஏற்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உடனடியாக பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கான தங்குமிட வசதி, அத்தியாவசிய தேவைகள் உட்பட உலர் உணவுப் பொருட்கள் அனைத்தையும் வழங்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

எனவே இது தொடர்பில் குறித்த தோட்டப்பகுதிக்கான பெருந்தோட்ட யாக்கத்திடம் பேசி அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக தோட்ட நிர்வாகத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களிடம் தெரிவித்தனர்.

மேலும் இந்த தீ விபத்து தொடர்பில் இன்று(04) இடம்பெறவுள்ள நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும், பாராளுமன்றத்திலும் பேசி அவர்களுக்கான உரிய தீர்வினையும் பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த தீ விபத்தினால் 24 வீடுகள் முற்றாக எரிந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், தீ விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லையெனவும் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here