அரச அதிபர் பங்கேற்ற கிரிக்கெட்  சுற்றுப் போட்டி

0
27
2025 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி  உஹன பொலிஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தெஹியத்தகண்டிய பிரதேச செயலக அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றது,
மாவட்ட செயலக அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
உஹன பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இந்தப் போட்டியில் மாவட்டச் செயலகம் மற்றும் உஹன, தமன, மஹாஓயா, பதியதலாவ மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச செயலகங்களின் அணிகள் பங்கேற்றன.
விளையாட்டில் பங்கேற்ற அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம பேசுகையில்..
எதிர்காலத்தில் இதுபோன்ற போட்டிகளை ஏற்பாடு செய்வதில் பங்கேற்க மாவட்டத்தின் பிற பிரதேச செயலகங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. போட்டியை ஏற்பாடு செய்த உஹன பிரதேச செயலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும், போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
( வி.ரி.சகாதேவராஜா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here