“2024 ஜனாதிபதி தேர்தல்” சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களை ஆதரித்து நுவரெலியா மாவட்டத்தில் (15) “இயலும் ஸ்ரீ லங்கா” ஜனாதிபதி வெற்றிப் பேரணி பிரச்சார கூட்டம் இடம் பெற்றிருந்தது.
அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தலைமையில், நுவரெலியா மணிக்கூட்டு கோபுரத்தின் அருகில் நடைப்பெற்ற இப்பிரச்சார பேரணிக் கூட்டத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது நுவரெலியா நகரம்.
இதன் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.கா தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.கா செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், சப்ரகமுவ மாகாண ஆளுனர் நவீன் திசாநாயக்க, முன்னாள் அமைச்சர் மனுச நாணயக்கார உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், இ.தொ.கா தேசிய அமைப்பாளர், பிரதி தலைவர், பிரதி பொதுச்செயலாளர், உப தலைவர்கள், முன்னாள் பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.