இயேசு பாலகனின் பிறப்பை முன்னிட்டு மட்டு. புனித மரியாள் தேவாலயத்தில் நள்ளிரவு வழிபாடு ஆராதனைகள்

0
32

இயேசு பாலகனின் பிறப்பை முன்னிட்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற நள்ளிரவு பிரதான வழிபாடு ஆராதனைகள்

கிழக்கு மாகாணத்தில் இயேசு பாலகனின் பிறப்பை முன்னிட்டு சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனைகள் மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆயர் அண்டன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

யேசு கிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் வழிபாடுகள் நேற்று நள்ளிரவு நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் யேசு கிறிஸ்த்து பிறப்பின் பிரதான வழிபாடு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றது.

யேசு கிறிஸ்து வழிபாடுகள் இம்முறை சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அண்டன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆலய பங்குத்தந்தைகளான ஸ்டனிஸ்லோஸ் மற்றும் ஜெயகாந்தன் உட்பட பங்குத்தந்தைகளினால் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது யேசு கிறிஸ்துவினை பிறப்பை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு தொட்டியில் யேசு பாலனின் உருவம் ஆயரினால் வைக்கப்பட்டு யேசு கிறிஸ்த்து பிறப்பு நினைவு கூறப்பட்டது. அதனை தொடர்ந்து விசேட யேசு கிறிஸ்த்து பிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது நள்ளிரவு ஆராதனைகள் வழிபாடுகளில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

குகதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here