இலங்கை எழுத்தாளருக்கு ‘கரிகாற்சோழன்’ விருது

0
268

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறையில் சிங்கப்பூர் முஸ்தபாதமிழ் அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழ்வேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை வாயிலாக இலங்கை- மலேசியா- சிங்கப்பூர் நாடுகிளில் இலக்கியப் படைப்புகளுக்கான ‘கரிகாற்சோழன்’ (2018- 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான) விருதுகள் வழங்கும் விழா 28.11.2022 மாலை 5.00 மணிக்குதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்பனுவல் அரங்கத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிவாளர் முனைவர்சி. தியாகராஜன், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் எம் எம். முஸ்தப்பா,தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வளர் தமிழ்ப்புல முதன்மையர் உ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொள்ள வரவேற்புரையை அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறைத்தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் நிகழ்த்தவுள்ளார்.

விருதுகளை அளித்து வாழ்த்துரை வழங்குகிறார் தஞ்சாவூர் மாநகராட்சி முதல்வர் சண்.இராமநாதன். சிறப்புரையாக திரைப்டப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா,திரைப்டப் பாடலாசிரியர் கவிஞர் சிநேகன் அகியோர்.
நன்றியுரையை ‘சிராங்கூன் டைம்ஸ் முதன்மை ஆசிரியர் மு. ஷாநவாஸ் நிகழ்த்துவார்.

இவ்விருதுவிழாவில் இலங்கையைச் சேர்ந்த மூன்று படைப்பாளிகள் விருதுபெறகிறார்கள்.

முறையே,
2018 ஆண்டுக்கான ‘சாகித்யரத்னா’தி. ஞானசேகரன் எழுதிய எரிமலை நாவல்.
2019 ஆண்டுக்கான மு.இ.அச்சிமுகமட் எழுதிய எனது நிலமும் நிலவும்,
2020 ஆண்டுக்கானஅருணா செல்லத்துரை எழுதிய பண்டார  வன்னியன் (கி.பி 1783- 1811)
தகவல்- கே. பொன்னுத்துரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here