இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில், கடந்த ஐந்து வருடங்களில் இவ்வாறு பதிவாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தகவலறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, இந்த முறைப்பாடுகள், தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளில் சட்டவிரோத கைது, பொய் வழக்குகள், தாக்குதல், சித்திரவதை, பாரபட்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பொலிஸ் துறையின் செயலற்ற தன்மை ஆகியவை அடங்குகின்றன.