முடிவுக்கு வந்த இறம்பொட புலுபீல்ட் தோட்ட வேலை நிறுத்த போராட்டம்

0
215

இறம்பொட புலுபீல்ட் தோட்டத்தில்   2019 ஆம் ஆண்டு தொடக்கம் தோட்ட முகாமைத்துவத்திற்கு எதிராக தமது உரிமைகளை கேட்டு தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்த வேலை நிறுத்த போராட்டம் இ.தொ.கா வின் தலையீட்டால் முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்,பாராளுமன்ற உறுப்பினரும்,காங்கிரஸின் தவிசாளருமான மருதுபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட மேல்மட்ட குழுவினர் தோட்ட நிர்வாக முகாமையாளருடன் முன்னெடுத்த போச்சு வார்த்தையில் சுமுகமான இணக்கப்பாடு எட்டியுள்ளது.

மேலும் 202 தொழிலாளர்களுக்கு சேவைக்கால பணம் ,ஊழியர் சேமியா நிதி போன்ற பல்வேறு கொடுப்பனவுகள் புலூம்பீல்ட் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்காமல் இருந்த நிலையில் தோட்டத்தை நிர்வாகிப்பதில் பல்வேறு சிக்கல் நிலைமை தோன்றியிருந்து.

இதன் காரணமாக மக்கள் கடந்த மூன்று வருட காலமாக தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுவந்தனர்.

இதனையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஊழியர் சேமலாம நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகிய கொடுப்பனவுகள் வழங்குவதாக உறுதியளித்த தோட்ட நிருவாகம் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் அப்பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் அத்தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச் காணியும், தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கவும் இணக்கம் காணப்படடுள்ளது .

எனவே எதிர்வரும் முதலாம் திகதி இருந்து மீண்டும் பணிக்கு திரும்பவது தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத பாண்டி ராமேஸ்வரன் பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து உபத் தலைவர் பாரத் அருள்சாமி குறித்த தோட்டத்தின் தலைவர், தலைவிகள் மற்றும் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது இ.தொ.கா மக்களின் உரிமை சார்ந்த அனைத்து விடையங்களிலும் எந்த தங்கு தடை ஏற்படுமாயின் அதனை தகர் தெரிந்து போகக்கூடிய சக்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு இருக்கின்றது.

என அங்கு கருத்து தெரிவித்த இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் 3 வருட காலமாக பணிபகிஸ்கரிப்பில் தொழிலாளர்களின் ஈடுப்பட்டு வந்தனர் அப்போராட்டத்தின் வெற்றியாக தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய சகல கொடுப்பனவுகளும் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

அத்தோடு குறித்த தோட்டத்தின் முகாமைத்துவத்தின் ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட முறைப்பாடுகள் சட்ட நடவடிக்கைகள் மற்றும் முகாமைதுவத்தின் ஊடாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மீள் பெறுவதற்கான உறுதியும் வழங்கியுள்ளனர்.

எனவே எதிர்வரும் முதலாம் திகதி முதல் வழமைக்கு தொழிலுக்கு திரும்பும்மாறு தொழிலாளர்களை ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here