இ. போ.ச பஸ் வண்டிகள் மீது கல்வீச்சு தாக்குதலில் கண்ணாடிகள் உடைந்து சேதம்

0
49

யாழ்பாணத்தில் இருந்து கல்முனைக்கும் மற்றும் வாழைச்சேனையில் இருந்து இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணித்த இரு இலங்கை போக்குவரத்து பஸ்வண்டிகள் மீது வாழைச்சேனை சுங்கான்கேணி 18 வது மையில் பிரதேசத்தில் இனம் தெரியாதேரினால் கல்வீச்சு தாக்குதலால் இரு பஸ்வண்டிகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்த சம்பவம் இன்று புதன்கிழமை (15) இரவு 07.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பஸ்வண்டிகள் வழமைபோல போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்கான்கேணி பிரதேசத்தில் சம்பவதினமான இரவு 07.30 மணியளில் இனம் தெரியாதோரினால் பஸ் வண்கள் மீது தீடிரென கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதையடுத்து பஸ் வண்டிகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்ததுடன்  பிரயாணிகள் தெய்வாதீனமாக உயர் தப்பியதுடன் எவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை .

இதனையடுத்து பஸ்வண்டிகள் அங்கு நிறுத்தப்பட்டு அதில் இருந்த பிரயாணிகளை வேறு பஸ்வண்டிகளில் மாற்றி ஏற்றி அனுப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here