ஒரு இலட்சம் அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் அறிவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

0
198

ஒரு இலட்சம் அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கேகாலை மாவட்ட செயலகத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின்படி நாட்டின் முழு அரச சேவையையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மிக வலுவான விரைவான அரச சேவையை உருவாக்கி அதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை அடைவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான இலட்சியமாகுமென நிகழ்வில் கலந்துகொண்ட தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

Next Gen (அடுத்த தலைமுறை) திட்டம் என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவாகும். டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமென வரவு செலவு திட்டத்திலும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த யோசனையின்படி இன்று முதல் இப்புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டளவில் இந்த நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here