கிழக்கு கரையோரத்தை அன்மித்து வாழும் விசேடத்துவம் மிக்க மக்கள் குடியினரான ” கடலோர ஆதிக்குடிகள்” தற்காலத்தில் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
அவற்றில் தேன் வெட்டுவதற்காக காடுகளுக்குள் செல்லும் போது வன சீவரசிகள் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகளால் ஏற்படும் தடை பிரதான பிரச்சினையாக குவேணி ஆதிக்குடிகளின் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் கே. கனகரத்னம் அவர்கள் தெளிவுபடுத்தினார். தேன் வெட்டுதல் என்பது கடலோர ஆதிக்குடிகளின் பரம்பரைத் தொழிலாகும்.
சுதந்திர ஊடக அமைப்பு, மாற்றுக் கொள்கைக்கான நிலையம் (CPA) இணைந்து கடந்தவாரம் மேற்கொண்ட ஊடக வெளியீட்டிற்கு அமைவாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே தலைமையிலான குழு முத்தூர் நல்லூர் பிறதேசத்திற்குச் சென்று இது தொடர்பில் தகவல்களை திரட்டி முறைப்பாடொன்றாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாடு செய்தனர்.
அந்த முறைப்பாட்டிற்கு அமைவாக செயற்பட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் கருணாதிலக, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே, சட்ட அதிகாரி சட்டத்தரணி எம். கபிலன், ( இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ) சட்ட அதிகாரி சட்டதரணி துசித சிரிவர்த்தன ( மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ) குறித்த முத்தூர் ஆதிவாசி கிராமங்கள் சிலவற்றிற்கு கள விஜயம் மேற்கொண்டு சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த ஆய்வு அறிக்கையில் அவதானத்தை செலுத்திய, மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை பிரதேச காரியலயம் இது தொடர்பில் வன சீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகளுடன் முன்னெடுத்த கலந்துரையாடலின் போது தேன் வெட்டுவதற்காக காடுகளுக்கு செல்லும் கடலோர ஆதிக்குடிகளுக்காக விசேட அடையாள அட்டையொன்றினை வழங்குவதற்கு குறித்த நிறுவனம் விருப்பத்தினை தெரிவித்ததாக மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை பிரதேச காரியலாய இணைப்பாளர் ஏ.எல். இசதீன் தெரிவித்தார்.
கரையோர ஆதிக்குடிகள் நிகழ காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெற்ற ஊடக வெளியீடு மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் இடையீடு இந்த வெற்றிக்கான அடிப்படையாக அமைந்ததாக முத்தூர் சந்தோஷபுரம் ஆதிவாசி தலைவர் வரதன் அவர்கள் குறிப்பிட்டார்.