கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
122
Immigration and Immigration Commissioner General Harsha Ilukpitiya has advised those who are in a hurry to get new passports to wait till September.-newsinlanka.com

ஏப்ரல் 15, 16, 17 ஆம் திகதிகளில் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பில் திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பி.எம்.டி. நிலூஷா பாலசூரிய விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஏப்ரல் 15, 16, 17 ஆம் திகதிகளில் நண்பகல் 12.00 மணி வரை மாத்திரமே ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளைப் பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நடைமுறையிலுள்ள 24 மணி நேர ஒருநாள் சேவையானது ஏப்ரல் 15 – 17 வரை இடம்பெறாது எனவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புதுவருடத்தை தொடர்ந்து தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லும் ஊழியர்களின் விடுமுறை காரணமாக, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here