கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட தொலுவ குருகெல தி. மு. ஜயரத்ன ஆரம்பப் பாடசாலையின் (25) ஒன்பது மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
149 மாணவர்கள் கல்விகற்கும் மேற்படி தொடக்கப்பள்ளியில், மதிய இடைவேளையின் போது குளவி தாக்குதல் இடம் பெற்றுள்ளன குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் உடடியாக ஆம்புலன்ஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
பள்ளி மைதானத்தின் அருகில் இருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டிலிருந்தே குளவிகள் களைந்து மாணவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த மாதம், கம்பளையைச் சூழ உள்ள மூன்று பாடசாலைகளில் குளவி கொட்டியதில் ஒரு எட்டு வயது மாணவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 80 திக்கும் மேற்பட்ட மாணவர்கள் , வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பளை, உலபனை மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டு தாக்குதலுக்கு இலக்கான அறுபது மாணவர்களும் பெற்றோர்களும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மேற்குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதி தோட்டப் பிரதேசத்தில் மட்டும் குளவித் தாக்குதலுக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மலைப்பகுதிகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் வல்லூரு, குரங்கு பறவைகளினால் இந்த குளவிகள் களைந்து மாணவர்கள், தோட்ட மக்கள் மற்றும் கிராம மக்களை தாக்குகின்றன. இது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தி, துன்பங்களிலிருந்து தங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கம்பளை நிருபர்