கவரவில தேசியப் பாடசாலைக்கு திறன்வகுப்பறை

0
276

ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான சாமிமலை கவரவில தேசியப் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறன்வகுப்பறையின் அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலை அதிபர் ஜெயபாலன் தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்தோட்ட கல்விக்கான இணைப்பாளர் ஆ. பி.சந்திரசேகரனின் ஆலோசனைக்கு அமைவாக அனைத்துலக மருத்துவநல அமைப்பு (IMHO,) மற்றும் இரட்ணம் அறக்கட்டளை நிறுவனங்களின் பூரண நிதி ஒதுக்கீட்டில் இந்த திறன்வகுப்பறையானது சாமிமலை கவரவில தேசிய பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்காக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிதியாக ஹற்றன் கல்வி வலயத்தின் பணிப்பாளர் திருமதி எ.சத்தியேந்திரா, IMHO, நிறுவன திட்டப் பணிப்பாளர் கந்தையா விக்னேஸ்வரன், ஐஆர்ழு நிறுவனத்தின் பெருந்தோட்டக் கல்விக்கான இணைப்பாளர் சந்திரசேகரன் மற்றும் IMHO, நிறுவன உத்தியோகத்தர்கள், அயல் பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி திறன்வகுப்பறை மூலமாக கவரவில தேசிய பாடசாலையில் கல்வி பயில்கின்ற 570 மாணவர்கள் இன்றைய நவீன கற்கையை தடையின்றி மேற்கொள்ள முடியும் எனவும், இந்த திறன் வகுப்பறையினை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் மூலமாக தேசியரீதியிலான பொதுப்பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டும் எனவும் ஹற்றன் கல்வி வலயத்தின் பணிப்பாளர் திருமதி எ.சத்தியேந்திரா தனது உரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாடசாலை அதிபர், தனது பாடசாலைக்கு என்ன தேவை என்பதை அறிந்து இவ்வாறான திறன் வகுப்பறையினை மாணவர்களின் கற்றல் தேவைக்காக வழங்கியமை மிகவும் போற்றத்தக்கது எனவும், எதிர்கால நவீன உலகை மாணவர்கள் திறன்வகுப்பறையைப் பயன்படுத்தி வெற்றிகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

திறன் வகுப்பறையை வழங்கிய IMHO மற்றும் இரட்ணம் அறக்கட்டளை அமைப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here