கவர்ச்சியை மறுக்கும் சாய்பல்லவி

0
327

எனது மதிப்பை குறைத்துக்கொண்டு விருப்பமில்லாத கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்” என்று நடிகை சாய் பல்லவி கூறியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சாய்பல்லவிக்கு நிறைய ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

தெலுங்கில் இவரை லேடி பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சாய் பல்லவி, எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் பிடிக்காத கதாபாத்திரங்களில் நடிக்க மறுத்துவிடுவதாக பட உலகினர் கூறுகிறார்கள்.

சாய்பல்லவி நடித்து அண்மையில் திரைக்கு வந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான கார்கி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் சிலர் சாய்பல்லவியை அணுகி இதுபோன்ற கனமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பது உங்கள் சினிமா வாழ்க்கையை பாதிக்கும். எனவே கதைகளை மாற்றுங்கள். கவர்ச்சியாகவும், காதல் காட்சிகளில் நெருக்கமாகவும் நடிக்க சம்மதியுங்கள் என்று வற்புறுத்தியுள்ளனர்.

அவர்களிடம் சாய்பல்லவி “அப்படியெல்லாம் நடிக்க முடியாது. சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லையென்றால் டாக்டர் வேலையை பார்ப்பேன். இல்லையென்றால் ஏதாவது வேலைக்கு போவேன். எனது மதிப்பை குறைத்துக்கொண்டு விருப்பமில்லாத கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்” என்று சாய் பல்லவி கூறியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here