கவிதைப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

0
3

டென்மார்க் சிவமீரா அறக்கட்டளையும் தாகம் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழும் இணைந்து நடாத்தும் மாபெரும் கவிதைப்போட்டி – 2024 தொடர்பில் அறிவிககப்பட்டுள்ளது.
ஒரு சமூக செயற்பாட்டாளராக வாழ்ந்து தனது 26 வயதில் டென்மார்க்கில் 31.12. 2014 இல் அகால மரணமடைந்த அரசியல் விஞ்ஞான முதுகலைப் பட்டதாரி அமரர் சிவமீரா பொடிசிங்கம் அவர்களின் நினைவாக சமூக செயற்பாடுகளில் இயங்கிவரும் சிவமீரா அறக்கட்டளையின் நிறுவனர் றொபேட் கெனடி சிவமீராவின் 10 வது ஆண்டு நினைவாக ஈழத்தில் வளர்ந்து வரும் கவிஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு தாகம் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழுடன் இணைந்து நடாத்தும் கவிதைப் போட்டி.
முதலாவது பரிசு: 20இ000. 00 இரண்டாவது பரிசு: 15இ000.00 மூன்றாவது பரிசு : 10இ000.00 3000.00 வீதம் 05 சிறப்பு பரிசுகள்.
போட்டி நிபந்தனைகள்
ஈழத்தில் வாழும் கவிஞர்களுக்கான கவிதைப்போட்டி. ஆகவே ஈழத்தில் வாழும் கவிஞர்கள் யாவரும் பங்கு பற்றலாம். கவிதைகள் புதுக்கவிதைகளாகஇ நவீன கவிதைகளாக அமையலாம். சூ கவிதைகள் 40 – 50 வரிகளுக்குள் அமைய வேண்டும். சூ ஒருவர் எத்தனை கவிதைகளும் அனுப்பலாம். ஆனால் ஒவ்வொரு கவிதைகளுக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதோடு கவிதைகளின் மூன்று பிரதிகள் அனுப்பப்பட வேண்டும். கவிதைகள் கணனிமயப்படுத்தப்பட்டோஇ அல்லது தெளிவான கையொழுத்திலோ ஏ4 தாளில் ஒரு பக்கத்தில் அமையவேண்டும். (இரண்டு பக்கமும் பாவிக்க கூடாது) சூ கவிதைகள் தமது சொந்த ஆக்கமெனவும்இ இதுவரை எந்தவொரு அச்சிதழ்இ ஊடகங்களிலும் பிரசுரமானதாகவோஇ வெளியிடப்பட்டதோ இல்லை என தமது விண்ணப்பத்தில் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
போட்டி முடிவுகள் வெளிவரும் வரையில் கவிதையை எந்த ஒரு ஊடகத்திலும் வெளியிட கூடாது. பரிசு பெறும் கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட சிவமீரா அறக்கட்டளைக்கு உரிமை உண்டு. கவிதைகள் அனைத்தும் வந்து சேரவேண்டிய இறுதித் திகதி 28-02-2025 கவிதை முடிவுகள் 28-03-2025 அன்று சமூக ஊடகங்கள் மூலம் அறியத்தரப்படும். சூ தங்கள் விண்ணப்பத்தில் தொலைபேசி இலக்கம்இ ஆயடை முகவரிகளை தெளிவாக குறிப்பிட வேண்டும். கவிதைகளை அனுப்பும்போது கடித உறையின் இடப்பக்க மேல் மூலையில் சிவமீரா கவிதைப் போட்டி – 2024 என குறிப்பிடவும். கவிதைகளை கீழ் காணும் ஏதாவது ஓர் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். ஆசிரியர் தாகம் 1ஃ41 புனித அந்தோனியார் வீதி பனந்தோட்டம் பாலையூற்று திருகோணமலை. ஆசிரியர் தாகம் 90.பார் வீதி மட்டக்களப்பு
தகவல்: வி. மைக்கல் கொலின் (ஆசிரியர் – தாகம்) 0774338878

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here