காஸாவில் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டது ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் தான் என்பதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. சின்வாரின் பற்களை ஆய்வு செய்து இதனை கண்டுபிடித்ததாக தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் உடலை அடையாளம் காண இஸ்ரேலுக்கு பல் மருத்துவ பதிவுகள் உதவியதாக தெரியவந்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்த அதில் ஒருவர் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் வெளியுறவு அமைச்சரும் இதனை உறுதி செய்துள்ளார்.

ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார், கடந்த ஜூலை மாதம் ஈரானில் நடந்த தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பின்னர் ஹமாஸின் தலைவரானார். சின்வார் 1962 இல் காசா நகரமான கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தவர். அவர் ஹமாஸின் ஆரம்பகாலத்தில் இருந்து உறுப்பினராக இருந்து வந்த நிலையில் அண்மைக்காலமாக ஹமாஸ் படைக்கு தலைமை தாங்கினார்.
1980களின் பிற்பகுதியில் இஸ்ரேல் நாட்டில் சின்வார் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் 12 பாலஸ்தீனர்களை கொன்றதாக ஒப்புக்கொண்டார். அதன் காரணமாக சுமார் 22 ஆண்டுகாலம் இஸ்ரேலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2011 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தின் படி சின்வார் விடுவிக்கப்பட்டார்.
1,027 பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய அரேபிய கைதிகள், ஒரே ஒரு இஸ்ரேலிய பணயக்கைதியான இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாட் ஷாலிட் ஆகியோருக்கு ஈடாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் சின்வார். அப்போது எடுக்கப்பட்ட அவரது பயோமெட்ரிக் பதிவுகள் இஸ்ரேல் வசம் உள்ளன. அதன்படி, பல் அமைப்பின் மூலம் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு சின்வார் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நன்றி Onindia