காலிமுகத்திடலுக்கு அழைப்பு

0
195

ரணில் விக்கிரமசிங்க – ராஜபக்ச அரசு இந்த நாட்டில் வாழும் சகல சமூகத்திற்கும் எதிராகவும் அமுல்படுத்தியுள்ள பயங்கரவாதச் சட்டத்திற்கான கையெழுத்து வேட்டை இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு சகல மக்களது பங்கு பற்றுதலுடன் காலிமுகத்திடத்திடலில் உள்ள அரகல பூமிக்கு வந்து கையெழுத்திடுமாறு பல்வேறு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன், முஜிபுர் ரஹ்மான் , உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பிரநிதிகள் கருத்து தெரிவித்ததுடன் இதற்கான ஆதரவையும் வழங்குவதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான பிரதேசங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு, கிழக்கு, தெற்கு உட்பட இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இதில் இணைந்துகொண்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தனர்.

இச் சட்டம் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு மட்டும் என்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுகக்கென்றும் அவ்வப்போது ஆட்சியிலிருந்து அரசாங்கள் அமுல்படுத்தி அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் எனக் கைது செய்தும் காணாமல் ஆக்கப்பட்டும் வந்தனர். கடந்த மே மாதத்தின் பின்னர் தெற்கிலும் அதாவது சிங்கள மக்களுக்கு இச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கான தமது பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்கான சுதந்திரம் இருந்தல் வேண்டும். அதற்காகவே இலங்கையின் சகல மக்களும் ஒன்றினைந்து யாழ். தொட்டு ஹம்பாந்தோட்டை வரையிலான மக்களை இணைத்துக் கொண்டு இக்கையெழுத்து வேட்டை த்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.
என அங்கு தொழிற்சங்கங்களின் பிரநிதிகள் கருத்து தெரிவித்தார்கள்.

22 ஆம் திகதி பிற்பகல் காலி முகத்திடலுக்கு வந்து இக் கையெழுத்து வேட்டையில் இணைந்து கொள்ளுமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.

(அஷ்ரப் ஏ சமத்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here