குழந்தையை பெற்று யன்னலால் வீசிய மாணவி

0
211
Batticaloa- hospital

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது  மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவரும் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபற்றி தெரியவருவதாவது,

மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த உயர் தரத்தில் கல்விகற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கற்பணியான இவர் கற்பணி என தெரிவிக்காது வைற்றுவலி என  மட்டு போதன வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆரம்ப சிகிச்சைக்காக குறுந்தரிப்பு அலகு வாட்டில் அனுமதிக்கப்பட்டார்இ

இதனை தொடர்ந்து வயிற்றுவலி என தெரிவித்த இவரை சரியான முறையில் வைத்தியர் சோதனையிடாது அவரது சலத்தை எடுத்து சோதனையிட்டு  வயிற்று வலிக்கான ஊசி மூலமாக வலிநிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் குறித்த நோயாளி மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் குழந்தையை பெற்று  யன்னல் வழியாக வீசியநிலையில் குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்ற நிலையில் குழந்தையை பெற்றுள்ளார் என அவர்களுக்கு தெரியவந்ததையடுத்து வீசிய குழந்தையை மீட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் தாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக  என தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த குழந்தையும் தாயும் பாதுகாப்பாக உள்ளதா மட்டு. போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராசா சரவணன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here