தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவரை கடத்தியமை மற்றும் அவரை காணாமல் ஆக்கியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, அத்திணைக்களத்தின் அதிகாரிகளால் இக்கைது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவி தெரிவித்துள்ளது.
அதற்கமைய தற்போது அவர் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.