கைது செய்யப்பட்டிருந்த முன்னிலை சோசலிச கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், நளின் குணவர்தன ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் முறையற்ற வகையில் பிரவேசித்து அங்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பாக குறித்த நால்வரும் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலேயே அவர்கள் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் இன்றையதினம் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர்களுக்கு தலா ரூ. 5 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது