காலி முகத்திடலில் அரச தலைவர் செயலகத்துக்கு முன்பாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் ‘கோத்தா கோ கம’ போராட்டக் குழுவினர் நேர ஒலிபரப்பு செய்வதற்கு பண்பலை வானொலி நிலையம் ஒன்றை தொடங்கியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பண்பலை வானொலிக்கு ‘போராட்டம் எஃப்.எம்’ என பெயரிட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.